சேலம் அருகே உள்ள தாசநாயக்கன்பட்டி பஞ்சாயத்து தலைவர் தேர்தலில் போட்டியிடும் செந்தில்குமார் என்பவருக்கு கை உருளை சின்னமும், ஊராட்சி குழு உறுப்பினர் பதவிக்கு சுயேச்சையாக போட்டியிடும் தனபால் என்பவருக்கு ரோடு ரோலர் சின்னமும் ஒதுக்கப்பட்டு இருந்தது.
இன்று தாசநாயக்கன்பட்டி பஞ்சாயத்தில் உள்ள 34, 35 பூத்களில் 2 வேட்பாளர்களுக்கும், வாக்குச்சீட்டில் ஒரே சின்னமாக கை உருளை அச்சிடப்பட்டு இருந்தது. ஆனால் அதை தெரியாத பொதுமக்கள் 34 -வது பூத்தில் 70 வாக்குகளும், 35-வது பூத்தில் 48 வாக்குகளும் பதிவு செய்தனர்.
இதுப்பற்றி தெரியவந்ததும் 8-30 மணிக்கு வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது. தேர்தல் நடத்தும் அதிகாரிகள் அங்கு வந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
thanks